sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்று வருமுன்காப்போம் திட்ட முகாம்

/

இன்று வருமுன்காப்போம் திட்ட முகாம்

இன்று வருமுன்காப்போம் திட்ட முகாம்

இன்று வருமுன்காப்போம் திட்ட முகாம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று வருமுன்காப்போம் திட்ட முகாம்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டல் காரப்பாறை பகுதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 'வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்' இன்று நடக்கிறது. முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காசநோய், தொழுநோய், மனநலம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க உள்ளனர். மக்கள் பங்கேற்று பிற நோய்களுக்கும் பரிந்துரை பெறலாம். இத்தகவலை மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஒரிச்சேரி புதுார் பஞ்., செயலரை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகைபவானி:பவானி அருகே ஒரிச்சேரி புதுார் பஞ்., ஒன்பதாவது வார்டு பகுதியில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த, 15 நாட்களாக குடிதண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பஞ்., செயலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த பெண்கள், 15க்கும் மேற்பட்டோர் பஞ்., அலுவலகத்துக்கு நேற்று காலி குடம், பக்கெட்டுடன் சென்றனர். அப்போது பஞ்., செயலர் பூங்கொடி, ஒரிச்சேரி புதுார் பஸ் ஸ்டாப்பில், வீட்டு வரி, தண்ணீர் வரிக்கான வசூலில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

இதையறிந்து அங்கு சென்ற பெண்கள், காலி குடம், பிளாஸ்டிக் பக்கெட்டுகளுடன் அவரை முற்றுகையிட்டனர். தண்ணீர் வந்து, 15 நாட்களாகிறது. ஆற்று தண்ணீர், போர்வெல் தண்ணீர் என தினமும் மாறி மாறி வந்த நிலையில், எந்த தண்ணீரும் வரவில்லை என்று கூறினர். நாளை (இன்று) தண்ணீர் வரும். அதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என செயலர் கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar