sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்15 மாதங்களாகியும் துவங்கவில்லை'

/

'சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்15 மாதங்களாகியும் துவங்கவில்லை'

'சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்15 மாதங்களாகியும் துவங்கவில்லை'

'சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்15 மாதங்களாகியும் துவங்கவில்லை'


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



'சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்15 மாதங்களாகியும் துவங்கவில்லை'

பெருந்துறை:பெருந்துறை சிப்காட்டில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவுபடுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில் மனு அனுப்பினர்.

அதில் கூறியிருப்பதாவது: பெருந்துறை சிப்காட்டில் இருந்து, நல்லா ஓடையில் வெளியேறும் மாசடைந்த கசிவு, கழிவு நீரையும், மாசடைந்த

நிலத்தடி நீரையும் சுத்திகரித்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. சிப்காட் தொழிற்சாலைகள் இணைந்து சிப்காட்டில், 40 கோடி ரூபாய் மதிப்பில் தினமும், 20 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவித்தனர். கடந்த, 2023 நவ., 12ல் அறிவித்து, 6 முதல், 7 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என கூறினர்.

சிப்காட் நிர்வாகத்தின் மெத்தன போக்கால், 15 மாதங்களை கடந்தும் பணி ஆணையே வழங்கவில்லை. டெண்டர் கூட இறுதி செய்யப்படவில்லை. இச்செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதல்வர் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar