/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில்4ம் சுற்று தண்ணீர் திறப்பு
/
கீழ்பவானி வாய்க்காலில்4ம் சுற்று தண்ணீர் திறப்பு
ADDED : மார் 27, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்பவானி வாய்க்காலில்4ம் சுற்று தண்ணீர் திறப்பு
பவானிசாகர்:பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கடந்த ஜன.,10 முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் சுற்று தண்ணீர் கடந்த, 16ல் நிறுத்தப்பட்ட நிலையில், நான்காம் சுற்று தண்ணீர் நேற்று காலை திறக்கப்பட்டது. மாலையில், 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 80.29 அடி, நீர் இருப்பு, 15.8 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 438 கன அடியாக இருந்தது. நான்காம் சுற்று தண்ணீர் ஏப்., 8ம் தேதி வரை விடப்படும்.