/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
108 அவசரகால ஆம்புலன்ஸ் பணியாளர் ஆர்ப்பாட்டம்
/
108 அவசரகால ஆம்புலன்ஸ் பணியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 01:21 AM
ஈரோடு ஈரோடு அருகே வீரப்பன்சத்திரத்தில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை மண்டல தலைவர் சிவகுமார், மதுரை மண்டல தலைவர் காளிதாஸ் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின், 2025-26ம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். கடந்த, 16 ஆண்டாக அடிப்படை சம்பளத்தில் உயர்வு வழங்காமல், ஊதிய உயர்வு என வழங்குவதால் பயனில்லை.
எவ்வளவு சதவீத ஊதிய உயர்வு வழங்கினாலும், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, போன்ற உயர்வில் எந்த பலனும் இல்லாமல் போகிறது. எனவே முறையான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தினர்.