/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக்சபா தேர்தலுக்காக 17 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்
/
லோக்சபா தேர்தலுக்காக 17 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்
ADDED : பிப் 02, 2024 10:20 AM
ஈரோடு: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்கள் உட்பட தேர்தல் விதிமுறைகளின்படி, ஈரோடு மாவட்டத்தில், 17 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (பி.டி.ஓ.,) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பி.டி.ஓ., (வட்டார ஊராட்சி) கல்பனா, சென்னிமலைக்கும், கொடுமுடி பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) சுமித்ரா அம்மாபேட்டைக்கும், சென்னிமலை பி.டி.ஓ., (வ.ஊ) குணசேகரன் அந்தியூருக்கும், அம்மாபேட்டை பி.டி.ஓ., (கி.ஊ) குகானந்தன் கொடுமுடிக்கும், அந்தியூர் பி.டி.ஓ., (வ.ஊ) சரவணன் சத்தியமங்கலத்துக்கும், டி.என்.பாளையம் பி.டி.ஓ., (வ.ஊ) சுபா பவானிசாகருக்கும், பி.டி.ஓ., (கி.ஊ) அர்த்தநாரீஸ்வரன் பவானிக்கும், நம்பியூர் பி.டி.ஓ., (வ.ஊ) ராதாமணி அம்மாபேட்டைக்கும், பவானிசாகர் பி.டி.ஓ., (வ.ஊ) மைதிலி டி.என்.பாளையத்துக்கும், தாளவாடி பி.டி.ஓ., (கி.ஊ) வரதராஜன் நம்பியூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் பி.டி.ஓ., (கி.ஊ) அப்துல் வகாப் தாளவாடிக்கும், கோபி பி.டி.ஓ., (கி.ஊ) மாரிமுத்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், அம்மாபேட்டை பி.டி.ஓ., (வ.ஊ) தங்கவேல் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் (டான்பிநெட்), மருத்துவ விடுப்பில் இருந்த பி.டி.ஓ., (வ.ஊ) பிரேமலதா மொடக்குறிச்சிக்கும், பெருந்துறை பி.டி.ஓ., (வ.ஊ) தனலட்சுமி கொடுமுடிக்கும், பவானி பி.டி.ஓ., (வ.ஊ) கார்த்திகேயன் பெருந்துறைக்கும், பெருந்துறை பி.டி.ஓ., (கி.ஊ) சண்முகபிரியா கோபிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக பணி செய்த சுந்தரவடிவேலு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று, உதவி இயக்குனர்களாகி உள்ளனர். மொடக்குறிச்சி பி.டி.ஓ., (வ.ஊ) ஜோதிபாக்கியம் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

