/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு வனக்கோட்டத்தில் 206 விதமான பறவைகள் கண்டுபிடிப்பு
/
ஈரோடு வனக்கோட்டத்தில் 206 விதமான பறவைகள் கண்டுபிடிப்பு
ஈரோடு வனக்கோட்டத்தில் 206 விதமான பறவைகள் கண்டுபிடிப்பு
ஈரோடு வனக்கோட்டத்தில் 206 விதமான பறவைகள் கண்டுபிடிப்பு
ADDED : பிப் 02, 2024 10:20 AM
ஈரோடு: ஈரோடு வனக்கோட்டத்தில், 206 விதமான பறவை இனங்கள், 24,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், ஆசனுார், ஈரோடு என, மூன்று வனக்கோட்டங்கள் உள்ளன. ஈரோடு வனக்கோட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய பகுதி உட்பட குளம், ஏரி என, 21 இடங்களில் கடந்த, 27, 28ல், பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினர், கல்லுாரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பறவைகள் ஆர்வலர்கள், நிபுணர்கள் என, 140 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
வெள்ளோடு சரணாலயம், கனகபுரம் ஏரி போன்ற இடங்களில் நிரந்தரமாக காணப்படும் பாம்புதாரா, சிறிய மற்றும் பெரிய நீர் காகம் போன்ற பறவைகள், பிற இடங்களில் இருந்து வந்து செல்லும் நெடுங்கால் உல்லான், ஊசிவால் வாத்து போன்ற பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:
ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி என, 6 தாலுகாவில், 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 206 விதமான பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில், 15 வகையான பறவை இனங்கள் புதிதாக அறியப்பட்டவை.
ஈரோடு கோட்டத்தில் மொத்தம், 24,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்த கணக்கெடுப்பின் மூலம், பறவைகளின் வருகை, அவை வாழ்வதற்கான சூழல் எவ்வாறு அமைந்துள்ளது. புதிதாக வரும் பறவைகள், அரிய பறவைகள் போன்றவற்றை கண்டறிய முடிந்தது.
இவ்வாறு கூறினார்.

