/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் கோவில்களில் 10 ஆண்டில் ரூ.3.51 கோடி காணிக்கை
/
பாரியூர் கோவில்களில் 10 ஆண்டில் ரூ.3.51 கோடி காணிக்கை
பாரியூர் கோவில்களில் 10 ஆண்டில் ரூ.3.51 கோடி காணிக்கை
பாரியூர் கோவில்களில் 10 ஆண்டில் ரூ.3.51 கோடி காணிக்கை
ADDED : ஜன 23, 2024 10:30 AM
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களில், 10 ஆண்டுகளில், 3.51 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூரில், கொண்டத்துக்காளியம்மன், அமரபணீஸ்வரர், ஆதிநாராயண பெருமாள் கோவில்கள் உள்ளன. கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், தீ மிதி விழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த கோவில்களில் மொத்தம் பத்து உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு மூன்று முறை, உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.
இதன்படி, 2012 ஜூலை 1 முதல், 2022 ஜூன் 30 வரை, 10 ஆண்டுகளில், பாரியூர் வகையறா கோவில் உண்டியல்களில், 3.51 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 35 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில், காணிக்கை பணம் வரவு வைக்கப்படுகிறது.

