/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
845 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா
/
845 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா
ADDED : செப் 20, 2025 02:04 AM
காங்கேயம், காங்கேயம் யூனியன் வீரணம்பாளையம் பஞ்., பகுதி மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கேயத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் கலெக்டர் மனிஷ் தலைமை தாங்கினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வீரனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, 71 பயனாளிகளுக்கு நத்தம் இலவச வீட்டுமனை பட்டா; 664 பயனாளிகளுக்கு ஆதி திராவிடர் நத்தம் இ-பட்டா என, 845 பயனாளிகளுக்கு, 3.27 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவானந்தன். நகர செயலாளர் சேமலையப்பன், காங்கேயம் தாசில்தார் மோகனன், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

