/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதியின் ஈரோடு வீட்டில் திடீர் சோதனை
/
ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதியின் ஈரோடு வீட்டில் திடீர் சோதனை
ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதியின் ஈரோடு வீட்டில் திடீர் சோதனை
ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதியின் ஈரோடு வீட்டில் திடீர் சோதனை
ADDED : ஜன 23, 2024 12:39 PM
ஈரோடு : ஈரோட்டில், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதி வீட்டில், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த, நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முஸ்தாகீர், 28; ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு உறுப்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் இளைஞர்களை சேர்க்கவும் முயற்சித்ததாக எழுந்த புகாரில், என்.ஐ.ஏ., குழுவினர், 2022 ஜூலையில் ரகசிய விசாரணைக்கு பின், ௧௦ பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், முஸ்தாகீருடன் ஈரோட்டுக்கு வந்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரது தந்தை மகபூப், சகோதரர் மட்டும் வீட்டில் இருந்தனர். அரை மணி நேரம் சோதனை நடந்தது. எவ்வித பொருளும் கைப்பற்றப்படவில்லை. கோவை மத்திய சிறையில்முஸ்தாகீரை அடைக்கப்பட்டார்.