/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இனி குருதிசையால் அ.தி.மு.க., அருகே தி.மு.க., நிற்க முடியாது; செங்கோட்டையன்
/
இனி குருதிசையால் அ.தி.மு.க., அருகே தி.மு.க., நிற்க முடியாது; செங்கோட்டையன்
இனி குருதிசையால் அ.தி.மு.க., அருகே தி.மு.க., நிற்க முடியாது; செங்கோட்டையன்
இனி குருதிசையால் அ.தி.மு.க., அருகே தி.மு.க., நிற்க முடியாது; செங்கோட்டையன்
ADDED : ஜன 23, 2024 12:38 PM
கோபி: ''குருதிசையால் இனி அ.தி.மு.க., அருகே தி.மு.க., நிற்கவே முடியாது,'' என கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலுாரில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமை வகித்து பேசியதாவது:
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம், தண்ணீர் இல்லை என கண்ணீர் சிந்திய விவசாயிகளின் நிலையை நாங்கள் மாற்றி காட்டியுள்ளோம். அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்திருந்தால், அடுத்த ஆறு மாதத்தில் அனைத்து ஏரி மற்றும் குளங்களை நிரப்பி காட்டியிருப்போம். தற்போது இரண்டரை ஆண்டு கடந்தும், அந்த திட்டத்துக்கான பைப் உடைந்து விட்டது. அதனால் தண்ணீர் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். அந்த சமயத்தில் அருகே இருந்த விநாயகர் கோவிலில், பூஜைக்காக எட்டு முறை மணி ஒலித்தது. இதை கவனித்த பின், தொடர்ந்து பேசுகையில், தற்போது எட்டு மணி ஓசை அடித்தது. ஒன்பது நவக்கிரகங்கள் நடைமுறையில் உள்ளது. அதை சுற்றித்தான் நாடே இயங்குகிறது. சரியாக எட்டு மணி ஓசை நமக்கு கேட்டுள்ளது. நாம் தற்போது குருதிசையில் சென்று கொண்டு இருக்கிறோம். எல்லா திசையை போல் நமக்கு இனி குருதிசை உச்சத்தில் வரும் நேரம் வந்துவிட்டது. எனவே குருதிசையால் இனி, அ.தி.மு.க., அருகே, தி.மு.க., நிற்கவே முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கோபி அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.

