/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகை கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
/
நகை கடைக்காரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 21, 2024 12:34 PM
ஈரோடு: அடமானத்துக்கு நகைகளை பெறும்போது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் எஸ்.பி., ஜவஹர் தலைமையில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி. ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட தங்க, வெள்ளி வைர வியாபாரிகள் சங்க தலைவர் இளஞ்செழியன், மாவட்ட நகை வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடையில் நான்கு புறமும் 'சிசிடிவி' கேமரா அமைக்க வேண்டும். புதிதாக நகை அடமானம் வைக்க வருபவர்களிடம் தேவையான ஆதாரங்களை பெற வேண்டும். ஆதார் அட்டை, அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, போட்டோ பெற வேண்டும்.
பழைய நகைகளை அடமானம் வைக்க வருபவர்கள் இளைஞராக, சந்தேகப்படும்படியாக இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். டூவீலரில் நகை வாங்க வரும் வாலிபர்கள் மீது சந்தேகமிருந்தால் போலீசில் தெரிவிக்க வேண்டும். உடைந்த, அறுந்து போன நகைகளை கொண்டு வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிற நகை கடைக்காரர்கள் திருட்டு நகைகளை வாங்குவது தெரிந்தால், போலீசில் தெரிவிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்த துண்டு பிரசுரங்கள், கடைக்காரர்கள் மற்றும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. கூட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட நகை கடைக்காரர்கள் பங்கேற்றனர்.

