/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., மகளிர் பிரதிநிதிகள் மாநாடு சென்னிமலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
பா.ஜ., மகளிர் பிரதிநிதிகள் மாநாடு சென்னிமலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பா.ஜ., மகளிர் பிரதிநிதிகள் மாநாடு சென்னிமலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
பா.ஜ., மகளிர் பிரதிநிதிகள் மாநாடு சென்னிமலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED : ஜன 24, 2024 10:07 AM
சென்னிமலை: ஈரோடு பாராளுமன்ற தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு, சென்னிமலையில் நேற்று நடந்தது. மகளிரணி மாநில பொது செயலாளர் மோகனப்பிரியா தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவி கார்த்திகா வரவேற்றார்.
மாவட்ட தலைவர்கள் திருப்பூர் தெற்கு மங்கலம் ரவி, ஈரோடு தெற்கு வேதானந்தம், நாமக்கல் மேற்கு ராஜேஷ்குமார், ஈரோடு தொகுதி அமைப்பாளர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினர்.
மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றினர். இதில் வானதி சீனிவாசன் பேசியதாவது: தி.மு.க., மேடையில் தலைவரின் உறவினர்களை தான் பார்க்க முடியும்.
பா.ஜ.,வில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பார்கள். நிர்மலா சீதாராமன் போன்ற தமிழக பெண்களுக்கு பிரமாண்டமான வாய்ப்பை பிரதமர் கொடுத்துள்ளார். ஈரோடு பகுதியில் பா.ஜ., வேகமாக வளர்கிறது.
இந்திய நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் சாதி, மத அடையாள அரசியலை தான் முன்னிறுத்தினர். ஆனால், மோடி வந்த பிறகு பெண்கள், விவசாயிக்கான அரசியலை முன்னிறுத்தினார். சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு கடன் கொடுக்கிறது என தெரிவதில்லை. மோடி மகளிருக்கு செய்யும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
அண்ணாமலையின் யாத்திரையில் மக்களின் எழுச்சியை காண முடிகிறது. தி.மு.க., செய்வது ஏமாற்று அரசியல். இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தாலிக்கு தங்கம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி திட்டத்தை நிறுத்தி விட்டனர். இலவச பஸ் பயண திட்டம் பெயரில் பேருந்தை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் காவி துண்டு அணிந்து
பங்கேற்றனர். மாநில செயலாளர் சாய் பூர்ணிமா நன்றி கூறினார்.

