/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வகுப்பு துவக்கம்

ADDED : ஜூன் 24, 2025 01:23 AM
ஈரோடு, கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. முதலாமாண்டை சேர்ந்த, 650 மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதலாமாண்டு துறை தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
கல்லுாரி செயலாளரும், பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கல்லுாரி தலைவர் வெங்கடாசலம், கல்லுாரி இணை செயலாளர் கெட்டிமுத்து, கல்லுாரி முதல்வர் பிரகதீஸ்வரன் ஆகியோரும் பேசினர். நிகழ்வில் கல்லுாரி இயக்குனர் கவியரசு, கல்லுாரி முதன்மை செயல் அலுவலர் கௌதம், அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்., ௨025 வாரியத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்த முதலாமாண்டு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப மாணவிகள் மீரா, சந்தியா மற்றும் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் எழில் அர்ஜூன், சங்கீத்குமார், விஜயராகவன், மின் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் கார்த்திகேயன், இரண்டாமாண்டு கணினி துறை மாணவிகள் இந்துமதி, கீர்த்தி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, விருது வழங்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் மணி நன்றி கூறினார்.