/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
/
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு
ADDED : செப் 26, 2025 01:18 AM
ஈரோடு :முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் பல்வேறு விளையாட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில், 13 வயதுக்கு ட்பட்ட மாணவர்களுக்கு, 15 கி.மீ.,; மாணவியருக்கு, 10 கி.மீ.,; 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, 20 கி.மீ.,; மாணவியருக்கு, 15 கி.மீ., துாரம் போட்டி நடக்கும்.
இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நாளை மறுநாள் (28ம் தேதி) காலை, 7:௦௦ மணிக்கு மாரத்தான் போட்டி நடத்தப்படும். 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ.,; பெண்களுக்கு, 5.கி.மீ.,; 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ.,; பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் போட்டி நடக்கிறது. கூடுதல் விபரத்திற்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவரை தொடர்பு கொள்ளலாம். இரு போட்டிகளிலும் அதிகளவில் மாணவ, மாணவியர், பொதுப்பிரிவினர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.