/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயர் கல்வித்துறையை கண்டித்து கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
உயர் கல்வித்துறையை கண்டித்து கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
உயர் கல்வித்துறையை கண்டித்து கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
உயர் கல்வித்துறையை கண்டித்து கல்லுாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 23, 2025 01:59 AM
ஈரோடு, ஈரோடு, திண்டல் தனியார் கல்லுாரி முன் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், வாயில் முழக்க தொடர் போராட்டத்தை துவக்கினர்.
செயலர் சவுந்தர்யா தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் கல்லுாரிகளை, தனியார் மயமாக்குவதும், அவற்றை தனியார் வசம் வழங்கி, பல்கலை கழகமாக மாற்றுவதாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை மசோதா தாக்கல் செய்துள்ளது. அம்மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
அதனை நிறைவேற்றக்கூடாது. இதன் மூலம் நீண்ட காலமாக போராடி பெறப்பட்ட அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் செயல்பாடு, மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் பாதிக்கும். தனியார் மயமாகும்போது, ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்விச்சுமை அதிகரிக்கும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நிர்வாகிகள் சாத்தப்பன், பசுபதி, கோகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.