/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 02, 2024 10:17 AM
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில், தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பில்லை. தவறுகளில் ஈடுபடும் தி.மு.க.,வினர் மீது அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். அரசின் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் எடுப்பார்கள் என, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசினர்.
முன்னாள் மேயர் மல்லிகா, பகுதி செயலர்கள் பழனிசாமி, மனோகரன், ஜெகதீசன், தங்கமுத்து, வக்கீல் அணி துரைசக்திவேல், முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
* பவானி அந்தியூர் பிரிவில், பெருந்துறை எம்எல்ஏ., ஜெயக்குமார் முன்னிலையில், பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலர் சீனிவாசன் மற்றும் பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை ஒன்றிய செயலர்கள் கலந்து கொண்டனர்.
* கோபியில் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசியதாவது: சென்னை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் நடந்த வெள்ளச்சேதத்துக்கு உரிய நிவாரண பணிகளை, தி.மு.க., அரசு மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது.
சத்தியமங்கலம் அருகே கோவில் பிரச்னை குறித்து, நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும், 6ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இவ்வாறு பேசினார்.
பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, கோபி அ.தி.மு.க., நகர செயலர் பிரினியோ கணேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபி நகர செயலர் முத்துரமணன், யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலர் தம்பி சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

