ADDED : ஜூன் 06, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சத்தி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டூவீலரில் வந்த ஒருவரிடம் சோதனை செய்தனர். அவரிடம், 98 போதை மாத்திரைகள் இருந்தன. விசாரணையில் கோவை, வேலாண்டிபாளையம் மனோஜ்குமார், 24, என்பது தெரிந்தது. கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக கூறினார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

