/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக்சபா தேர்தலில் இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி
/
லோக்சபா தேர்தலில் இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி
லோக்சபா தேர்தலில் இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி
லோக்சபா தேர்தலில் இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி
ADDED : பிப் 02, 2024 11:11 AM
ஈரோடு: ''லோக்சபா தேர்தலில், இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு பஸ் ஸ்டாண்டில், சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயண பேரணி நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் வரவேற்றார். பள்ளி உட்பட பல்வேறு அமைப்பினரின் பேரணியை துவக்கி வைத்து, மஞ்சள் பை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
ஜன., 15 முதல், பிப்., 14 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒரு விபத்து ஏற்பட்டால், 48 மணி நேரத்துக்கு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள், சிகிச்சைகளை அரசு மேற்கொள்கிறது. அவர்களை அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தாலும், அதை அரசு ஏற்கிறது. இதன் மூலம் பல உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது.
ஈரோடு அரசு போக்குவரத்து பணிமனையில், கூடுதல் பணி வழங்கியதால் ஓட்டுனர், நடத்துனர் போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி விசாரிக்கின்றனர். தவறு இருந்தால் சரி செய்யப்படும். தொழிலாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம். பல்லடத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதுதான் காரணம் என பேசுகின்றனர். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உரிய ஆதாரத்துடன், தவறு நடப்பதாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும், 8ல் அமைச்சர் உதயநிதி ஈரோடு வருகிறார். ஈரோடு, சோலார் பஸ் ஸ்டாண்டில் காலை, 9:00 மணிக்கு மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் நடக்கிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு இப்போது இல்லை. அதற்கு மேலும் இரு மாதமாகலாம்.
வரும் லோக்சபா தேர்தலில், இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி வலியுறுத்தினார். ஆரோக்கியமான விஷயம். அதேநேரம், நான் ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறையில், ஈரோடு தொகுதி, தி.மு.க.,வுக்கு வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் தலைமை எடுக்கும் முடிவை சந்தோஷமாக செய்வோம். இளைஞர்கள் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
இவ்வாறு கூறினார்.

