/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளத்தில் லாரி பல்டி: உயிர் தப்பிய டிரைவர்
/
பள்ளத்தில் லாரி பல்டி: உயிர் தப்பிய டிரைவர்
ADDED : செப் 20, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி பெருந்துறையில் இருந்து மாட்டு தீவனம் ஏற்றிய லாரி தாளவாடிக்கு புறப்பட்டது. சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சென்றது. தாளவாடி தர்மாபுரம் வடிவேல், 55, ஓட்டினார்.
புன்செய்புளியம்பட்டியை அடுத்த செண்பகப்புதுார் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள, 10 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
மாட்டு தீவன மூட்டைகள் பள்ளத்தில் சிதறி விழுந்தன. அக்கம்பக்கத்தினர் டிரைவர் வடிவேலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

