ADDED : செப் 19, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை அடுத்த வடக்கு ராமலிங்க
புரத்தை சேர்ந்தவர் மணி, 35; கட்டுமான தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில், மனைவி புஷ்பா மகனை அழைத்துக் கொண்டு, மதுரையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு நான்கு மாதத்திற்கு முன் சென்று விட்டார்.
இதனால் வேதனை அடைந்த மணி, கடந்த, 13ம் தேதி மது போதையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

