/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் மனுக்களை பெற்ற அமைச்சர் மதிவேந்தன்

ADDED : ஜூன் 25, 2025 01:17 AM
அந்தியூர், அந்தியூர் அருகே பச்சாம்பாளையம் பஞ்., மக்களுக்காக, மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நலத்திட்ட உதவி வழங்கினார். முகாமில் பல்வேறு துறை சார்ந்த, 189 மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல் வெள்ளித்திருப்பூர் அருகே சனி சந்தையில் நடந்த முகாமில், 152 மனுக்கள், முனியப்பன்பாளையத்தில் நடந்த முகாமில், 162 மனுக்களும் பெறப்பட்டன. முகாம்களில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பஸ்சில் சென்ற அமைச்சர்
டி.என்.பாளையம், பெருமுகை பஞ்.,ல் நடந்த, மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாமில், அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். எரங்காட்டூர், கரும்பாறைபுதுார், தொட்டக்கோம்பை ஆகிய வழித்தடங்களில் நீடிக்கப்பட்ட அரசு பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பஸ்சில், 7 கி.மீ., பயணித்து, தொட்டகோம்பை சென்றார். அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக நடமாடும் ரேஷன் கடையை தொடங்கி வைத்தார்.