/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி அருகே விபத்தில் தாய் பலி; மகன் காயம்
/
கோபி அருகே விபத்தில் தாய் பலி; மகன் காயம்
ADDED : செப் 26, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி :திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒத்தபனை மேட்டை சேர்ந்தவர் கரண்தேவ், 21; திருச்செங்கோட்டில் மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். இவரின் தாயார் கிருஷ்ணவேணி, 44; பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, ஹோண்டா டியோ பைக்கில் இருவரும் சென்றனர்.
கோபி அருகே குருமந்துார் சாலையில் நேற்று காலை சென்றனர். கோபியை சேர்ந்த பிரகாசம் ஓட்டி வந்த பொலீரோ பிக்-அப் சரக்கு ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், கிருஷ்ணவேணி இறந்தார். மகன் கரண்தேவ் புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.