ADDED : செப் 11, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், :ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு நேற்று வந்தார். பவானிசாகர் தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசித்தார். பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது: பவானிசாகர் சட்டசபை தொகுதியை பொருத்தவரை தொண்டர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லை. பொது செயலாளர் பின்னணியில் அணிவகுத்து நிற்கிறோம். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை தனி நபர் முக்கியமல்ல; இயக்கம் தான் முக்கியம். வரும், 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் அந்தியூரில் நடக்கிறது. அதை சிறப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டது. இவர் கூறினார்.