/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாதசுவாமி கோவிலில் ரூ.14.40 லட்சம் காணிக்கை
/
குருநாதசுவாமி கோவிலில் ரூ.14.40 லட்சம் காணிக்கை
ADDED : செப் 20, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி மாத தேர்த்திருவிழா முடிந்த நிலையில், கோவில்களில் வைக்கப்பட்டுள்ள, 21 உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று நடந்தது.
ஈரோடு இந்துசமய உதவி ஆணையர் சுகுமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, புதுப்பாளையம் மடப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில், 14 லட்சத்து, 40 ஆயிரத்து, 402 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இப்பணியில் அந்தியூர் ஆய்வாளர் சிவமணி, செயல் அலுவலர் மோகனப்பிரியா, பரம்பரை அறங்காவலர்கள் சாந்தப்பன், குரு ராஜேஷ் உடனிருந்தனர்.

