/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
26ம் தேதி தேரோட்டம் துவக்கம் சிவன்மலையில் தயாராகும் தேர்
/
26ம் தேதி தேரோட்டம் துவக்கம் சிவன்மலையில் தயாராகும் தேர்
26ம் தேதி தேரோட்டம் துவக்கம் சிவன்மலையில் தயாராகும் தேர்
26ம் தேதி தேரோட்டம் துவக்கம் சிவன்மலையில் தயாராகும் தேர்
ADDED : ஜன 23, 2024 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச திருவிழா, மலை அடிவார வீரகாளியம்மன் கோவிலில், கடந்த, 17ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும், 26ம் தேதி நடக்கிறது. மலையை சுற்றி தேர் இழுக்கப்படும்.
இந்நிலையில் தேரை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 26ம் தேதி மாலை நடக்கும் தேரோட்டத்தில் அமைச்சர்கள், இந்து சயம அறநிலைய துறையினர், பக்தர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். திருத்தேர் மூன்றாம் நாள் மலையை வலம் வந்து நிலை அடையும்.