/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நாளை 250 கோவில்களில் ராம நாமம்
/
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நாளை 250 கோவில்களில் ராம நாமம்
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நாளை 250 கோவில்களில் ராம நாமம்
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நாளை 250 கோவில்களில் ராம நாமம்
ADDED : ஜன 21, 2024 12:36 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 250 கோவில்களில், 22ம் தேதி ராம நாமம் ஜெபிக்க, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், கோவில்களில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: பஞ்சாயத்துக்கு ஒன்று என, 250 கோவில்களில் ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் அபிஷேகம், 108 முறை ராம நாமம் ஜெபிக்க, ஈரோடு டவுனில், 25 கோவில்களிலும் அபிஷேகம், ராம நாமம் ஜெபித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. சில கோவில்களில் பஜனை, அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் அறநிலையத்துறைக்கு உட்படாத கோவில்களில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்து முன்னணி சார்பில் ஈரோடு ரங்கம்பாளையம் பெருமாள் கோவிலில் பஜனை, ராம நாமம் ஜெபித்தல், கும்பாபிஷேக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாணிக்கம்பாளையம் முருகன் கோவில், அசோகபுரம் மாரியம்மன் கோவிலிலும் பஜனை, ராம நாமம் ஜெபித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

