/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விதி மீறும் வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம்
/
விதி மீறும் வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம்
ADDED : ஜூன் 24, 2025 01:46 AM
தர்மபுரி, ஜதர்மபுரி மாவட்டத்தில், போக்குவரத்து விதி மீறல், விபத்தால் உயிரிழப்புகளை தடுக்க, மாவட்ட கலெக்டர் சதீஷ், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் பயன்படுத்தி வந்த, 'ஸ்பீட் ரேடார் கன்' தர்மபுரி டவுன் பகுதி முக்கிய சாலைகளில், பயன்படுத்தும் நடவடிக்கையை நேற்று, தர்மபுரி ஆர்.டி.,ஓ., அலுவலகம் முன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், பைக்குகளில் ஹெல்மெட் அணியாதது, மொபைல்போன் பேசிக்கொண்டு பைக் ஓட்டுதல், பைக்கில், 3 பேர் பயணித்தல், கார்களில் சீட் பெல்ட் அணியாதது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை, 'ஸ்பீட் ரேடார் கன்' மூலம் ஆன்லைன் மூலம், உடனுக்குடன் படம் பிடித்து, வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்து, தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜெயதேவ்ராஜ் கூறுகையில், ''ஸ்பீட் ரேடார் கன் மூலம், போக்குவரத்து விதி மீறும் வாகனங்கள் உடனுக்குடன் படம் பிடிக்கப்பட்டு, ஆன்லைனில், 1,000 ரூபாய் முதல் வேகம் மற்றும் விபத்தின் தன்மைக்கு ஏற்ப கூடுதல் அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிந்து வாகனம் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த,'ஸ்பீட் ரேடார் கன்' தர்மபுரி டவுன் பகுதியில் அனைத்து முக்கிய சாலைகளும், தினமும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட உள்ளது,'' என்றார்.