/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா ஏற்பாடு
/
ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா ஏற்பாடு
ADDED : ஜன 21, 2024 12:33 PM
ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழாக்கள், வ.உ.சி., மைதானத்தில் நடத்தப்படும். பஸ் ஸ்டாண்ட் அருகே மைதானம் உள்ளதால், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உட்பட பல தரப்பினர் வந்து செல்ல வசதியாக இருந்தது.
மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி உட்பட பல்வேறு புனரமைப்பு பணி நடப்பதால், போலீஸ் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி நடத்த போதிய இடவசதி இல்லை. இதனால் கடந்தாண்டு சுதந்திர தின விழா, ஈரோட்டை அடுத்த ஆணைக்கல்பாளையம் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. அதுபோல, 26ம் தேதி குடியரசு தினவிழாவும் அங்கு நடத்த திட்டமிட்டு, மாவட்ட நிர்வாகம் பணிகளை தொடங்கியுள்ளது.
கார், பைக் இருந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும். நடந்தும், பஸ்களிலும் கூட செல்ல முடியாத இடத்தில் இவ்விடம் உள்ளதால், குடியரசு தினவிழாவை சாதாரண மக்கள் பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
200 மாணவர் பங்கேற்பு
ஆயுதப்படை வளாகத்தில் நடக்கும் குடியரசு தின விழாவில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசிய கொடியேற்றுகிறார். இதில் மாவட்டத்தில் உள்ள ஏழு பள்ளிகளை சேர்ந்த, 200 மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

