ADDED : ஜூன் 24, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கிராம மக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது:
பவானி தாலுகா, சலங்கபாளையம் டவுன் பஞ்.,குருசான்வலசு காலனி பகுதியில், பட்டியல் இன அருந்ததியர் மக்கள், 40 குடும்பத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் மூன்று தலைமுறையாக, 70 ஆண்டுக்கு மேல் வசிக்கின்றனர். இவர்களுக்கு சுபகாரிய நிகழ்வு செய்ய, சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும். முறையான மயான வசதி இல்லை. 3 கி.மீ., துாரம் சென்று வாரி புறம்போக்கு ஏரியில் மயானமாக பயன்படுத்துகின்றனர். அதேநேரம் அப்பகுதியில் அரசு பதிவில் மயான இடம் என ஒரு இடம் உள்ளது. அவை ஆக்கிரமிப்பில் உள்ளதால் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு முறையான மயான இடம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.