ADDED : ஜூன் 15, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் அருகே குள்ள நாயக்கனுார் கிராமம், சரோஜினி வீதியில், ரேஷன் அரிசியை பதுக்கி வெளிமாநிலத்துக்கு கடத்துவதாக தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு போலீசார் சோதனையில், ஐந்து மூட்டைகளில், 220 கிலோ ரேஷன் அரிசி, எடை இயந்திரம் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இருவரை தேடி வருவதாக தெரிவித்தனர்.