/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2024 10:08 AM
புன்செய்புளியம்பட்டி: உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், புன்செய் புளியம்பட்டி நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சிவகாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாநில செயலாளர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பவானிசாகர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* சத்தியமங்கலத்தில் இரு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிக்கரசம்பாளையத்தில் வட்டார சங்க தலைவர் சுரேஷ் தலைமையிலும், சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* பவானி யூனியன் அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர்கள் கண்ணன், நடராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கையை விளக்கி சி.பி.ஐ., மாநில குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கந்தசாமி பேசினர்.

