நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட், வாரச்சந்தை ஜவுளி கடைகள், டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை பகுதியில் சந்தைக்கான ஜவுளி விற்பனை நடந்தது.
கேரள, ஆந்திர, கர்நாடக, மஹாராஷ்டிர மாநில வியாபாரிகள் அதிகம் வருவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள், கடைக்காரர்கள் வருவர்.
வெளிமாநில வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் நேற்று அதிகம் வராததால் மொத்த விற்பனை மிகவும் குறைந்தது.
இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ''பொங்கல் முடிந்த நிலையில் விற்பனை மந்தமாக உள்ளது. தைப்பூசத்துக்காக சென்று வரும் பக்தர்கள், வெளியூர்காரர்கள் மட்டும் வாங்கிச் சென்றனர்,'' என்றனர்.

