/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் மோதிய விபத்தில் இரு மூதாட்டி காயம்
/
பைக் மோதிய விபத்தில் இரு மூதாட்டி காயம்
ADDED : ஜூன் 26, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் ராஜம்மாள், 60. அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 62. இருவரும் இண்டியாம்பாளையத்தில் உள்ள மில்லில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் கடந்த, 19ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, அதே பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பவானியை சேர்ந்த அம்மாசை, 40, என்பவர் ஓட்டி வந்த, ேஹாண்டா பைக் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

