/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து குறைந்ததால் காய்கறி விலை உயர்வு
/
வரத்து குறைந்ததால் காய்கறி விலை உயர்வு
ADDED : ஜன 14, 2024 11:32 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா நேதாஜி காய்கறி மொத்த மற்றும் சில்லறை விற்பனை மார்க்கெட்டுக்கு கடந்த, 2 தினங்களாக காய்கறி வரத்து குறைந்து, கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
இம்மார்க்கெட்டுக்கு தாளவாடி, ஒசூர், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்தாகும். தினமும், 900 முதல், 1,200 டன் காய்கறிகள் லாரி மூலம் வரத்தாகும். நேற்று, 750 டன் மட்டுமே வரத்தானது. இதனால் கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் விலை உயர்ந்து காணப்பட்டது.
கடந்த வாரம், 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட கொத்தவரை, 80 ரூபாய்க்கும், 35 முதல், 40 ரூபாய்க்கு விற்ற உருளை கிழங்கு, 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் - 30 ரூபாய், சின்ன வெங்காயம் - 35, தக்காளி - 25 முதல், 30, பச்சை பட்டாணி - 100, காலிபிளவர் - 40 முதல், 50, முட்டைகோஸ் - 40 முதல், 50, முள்ளங்கி-60, புதிய இஞ்சி - 120 முதல், 150, பீட்ரூட்-60, பீன்ஸ்-80, கேரட் - 60 முதல்,70, புடலை-60, மிளகாய்-80, முருங்கை-160, பட்டை அவரை-80, பீர்க்கன்காய்-80, பாவைக்காய்-60, வெண்டை-50 முதல், 60, கத்தரிக்காய்-70 முதல், 80, வாழைக்காய்- 5 முதல், 8 ரூபாய் வரை விற்றது. பொங்கல் பண்டிகை என்பதால், விலை உயர்வை மறந்து, மக்கள் வாங்கி சென்றனர்.

