/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செயற்கை ஓடுதள பாதை அமைக்கும் பணி தீவிரம்
/
செயற்கை ஓடுதள பாதை அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஜன 21, 2024 12:36 PM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், கால்பந்து, கைப்பந்து, தடகளம் உட்பட பல்வேறு விளையாட்ட போட்டிகளுக்கு மாணவ, மாணவியர் பயிற்சி பெறுகின்றனர். இம்மைதானத்தில் செயற்கை இழையால் ஆன ஓடுதளப்பாதை, 7.75 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க நிதி பெறப்பட்டது.
இதன்படி, 84.39 மீட்டர் நீளம், 34.50 மீட்டர் அகலம் கொண்ட செயற்கை ஓடுதளப்பாதை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஓடுதளப்பாதைக்கு மாற்றாக, 2 மீட்டர் கிழக்கு புறமாக கூடுதலாக இணைப்பதன் மூலம், முழுமையாக, 400 மீட்டர் ஓடுதளப்பாதையும், 3 மீட்டர் இட வசதியுடன் கூடிய சுற்று வட்டமாக, 8 பாதை கொண்ட முழுமையான செயற்கை இழையால் ஆன ஓடுதளப்பாதையும், 100 மீட்டர் ஓடுதளம், 9 பாதைகளுடன் கூடிய இடவசதியும் கிடைக்கிறது. இதற்கான பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் பணி முடிந்து, பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்று, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

