/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'கள்' வைத்திருந்த 2 பேர் கைது
/
'கள்' வைத்திருந்த 2 பேர் கைது
ADDED : செப் 20, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக கள் வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் பகுதியில் கள் இறக்குவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கனியாமூரைச் சேர்ந்த சுரேஷ், 40; பெருமங்கலத்தைச் சேர்ந்த முருகன், 65; ஆகியோர் 'கள்' இறக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. உடன், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1.25 லிட்டர் 'கள்,'மண்பானை, குடம், அருவா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

