/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.20.08 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.20.08 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.20.08 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.20.08 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜன 19, 2024 07:27 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 20.08 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப்பின் விளைப்பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று கொண்டு வந்தனர். அதில், உளுந்து 190 மூட்டை, மக்காச்சோளம் 118, தலா ஒரு மூட்டை எள், பாசி பயிறு, நாட்டு கம்பு, தட்டைப்பயிறு என மொத்தம் 76 விவசாயிகள் 312 மூட்டை விளைபொருட்களை கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தனர்.
சராசரியாக, ஒரு மூட்டை உளுந்து 9,020 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,256, எள் 6,129, பாசி பயிறு 8,500, நாட்டு கம்பு 6,868, தட்டைப்பயறு 6,979 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. கமிட்டியில் மொத்தமாக 20 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் ஒரு விவசாயி 65 மூட்டை மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்தார். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,270 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 188 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

