/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடும்பத் தகராறில் இரு தரப்பு மோதல் 60 பேர் மீது வழக்கு: 6 பேர் கைது

ADDED : ஜன 14, 2024 05:10 AM
மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 60 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோசின்கான், 27; இவரது மனைவி பரிதா, 22; இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் ஆனது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இருவரும் சேர்ந்து வாழ நேற்று முன்தினம் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் 60 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து, வடபொன்பரப்பியைச் சேர்ந்த பஷீர் மகன் மாஜின், 19; சலாம் மகன் தாஜூதீன், 59; மற்றும் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜாகிர்கான் மகன் ஜாபர், 20; அல்லாபக்ஷ் மகன் மோசின்கான், 27; முகமது சையத் மகன் முக்ரம், 41; இஸ்மாயில்கான் மகன் ரியாஸ்கான், 43; ஆகிய 6 பேரை கைது செய்தனர்.