/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி ஆவண பதிவேடு அறையில் தீ விபத்து
/
பள்ளி ஆவண பதிவேடு அறையில் தீ விபத்து
ADDED : ஜன 23, 2024 11:36 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பள்ளி ஆவண பதிவேடு அறையில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை தாலுகாவில் களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, பள்ளிக்குச் சென்று ஆவணங்கள் இருந்த அறையை திறந்து பார்த்தார்.
அப்போது பழைய வருகை பதிவேடு உள்ளிட்ட மூன்று பதிவேடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து புகை வந்துள்ளது.
உடன் அவற்றை தலைமை ஆசிரியர் பழனி மற்றும் ஆசிரியர்கள் அனைத்து பெரும் தீ விபத்து ஏற்படுவதை தவிர்த்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் பழனி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து, தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

