ADDED : பிப் 02, 2024 04:00 AM

உளுந்துார்பேட்டை: வீட்டு வேலை செய்த திருநறுங்குன்றம் பெண்ணை சித்ரவதை செய்த தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா, ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல்.
ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், ராஜசேகர், பழனி, பழனிச்சாமி, அய்யம்பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வேலை செய்த திருநறுங்குன்றம் பெண்ணை தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் மற்றும் மருமகள் கொடுமைப்படுத்தியதை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசினர்.

