/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 11:35 PM

கள்ளக்குறிச்சி : தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக் டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் முருகேசன், துணை செயலாளர் ரீதா, துணை தலைவர் கபில்தேவ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட நிர்வாகிகள் கலியபெருமாள், பால்ராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில் பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும், விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும்.
பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

