/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம்
/
புதிய நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம்
ADDED : ஜன 24, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நாளை புதிதாக துவங்க உள்ள 2 நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் நாளை 25ம் தேதி துவக்கி வைக்கப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியாக பணிபுரிந்த இருசன் பூங்குழலி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், உளுந்துார்பேட்டை சார்பு நீதிபதியாக பணிபுரிந்த ஸ்ரீராம், கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

