/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவ கல்லுாரியில் பக்க விளைவு குறித்த விழிப்புணர்வு
/
அரசு மருத்துவ கல்லுாரியில் பக்க விளைவு குறித்த விழிப்புணர்வு
அரசு மருத்துவ கல்லுாரியில் பக்க விளைவு குறித்த விழிப்புணர்வு
அரசு மருத்துவ கல்லுாரியில் பக்க விளைவு குறித்த விழிப்புணர்வு
ADDED : செப் 18, 2025 11:02 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மருந்து பக்க விளைவு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மருந்தியல் துறையில் இயங்கி வரும் மருந்து பக்க விளைவுகள் கண்காணிப்பு மையம், இந்திய மருந்தியல் ஆணையம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு மையம் சார்பில் மருந்தியல் சார் புலனாய்வு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் பவானி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஷமீம், மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, மருத்துவ நிலைய அதிகாரி பொற்செல்வி முன்னிலை வகித்தனர். மருந்தியல் துறை தலைவர் சுகிர்தா வரவேற்றார்.
இதில் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக தெரியப்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு செய்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதில் மருந்தியல் துறை உதவி பேராசிரியர்கள் அனுஷா, மகாலஷ்மி, ஸ்ரீகாந்த், வந்தனாதேவி, சத்யா உட்பட துறை பேராசிரியர்கள், மருத்துவ மாணவ மாணவிகள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

