/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம்
/
பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம்
ADDED : ஜன 23, 2024 10:19 PM

சங்காபுரம் : சங்கராபுரம் அரசு பாலி டெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இன்னர்வீல் கிளப் சார்பில் நடந்த முகாமிற்கு, இன்னர்வீல் கிளப் தலைவி கவுரி தலைமை தாங்கினார். கீதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சேட்டு முகாமைத் தொடங்கி வைத்தார். ரத்ததானம் விழிப்புணர்வு குறித்து டாக்டர் சுகன்யா பேசினார்.
முகாமில், இன்னர்வீல் கிளப் உறுப்பினர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
முகாமில் என்,எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷணி, மேற்பார்வையாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி, ரோட்டரி முன்னாள் தலைவர் முத்துக்கருப்பன், இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவிகள் தீபா, மஞ்சுளா, உறுப்பினர்கள் கல்யாணி, ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். பார்கவி நன்றி கூறினார்.

