/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
/
பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ADDED : ஜன 23, 2024 10:16 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பொ.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தமிழரசன், 48; கடந்த 13 ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பெற்றோர்களுடன் பெங்களூருவில் இருக்கும் வீட்டிற்கு தமிழரசன் சென்று இருந்தார். கடந்த 21ம் தேதி மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அறையில் இருந்த பீரோவை திறந்து ஐந்தரை பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

