/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் டயர் வெடித்து விபத்து; போலீஸ்காரர், மனைவி பலி
/
கார் டயர் வெடித்து விபத்து; போலீஸ்காரர், மனைவி பலி
கார் டயர் வெடித்து விபத்து; போலீஸ்காரர், மனைவி பலி
கார் டயர் வெடித்து விபத்து; போலீஸ்காரர், மனைவி பலி
ADDED : ஜன 23, 2024 12:38 AM

உளுந்துார்பேட்டை : சென்னை, தாம்பரம், மணிகண்டன் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலமுருகன், 32. தாம்பரம், சங்கர் நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவரது மனைவி வினோதினி, 30.
இருவரும், கரூரில் உள்ள வினோதினியின் தாய் வீட்டிற்குச் சென்று விட்டு, 'போர்டு ஐகான் ஸ்போர்ட்' காரில் நேற்று முன்தினம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
இரவு 10:30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்தபோது, காரின் வலது முன் பக்க டயர் வெடித்து மீடியனில் மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசை சாலையை நோக்கி பாய்ந்தது. அப்போது, புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற 'பார்ச்சூனர்' கார் மீது மோதியது.
இதில் பாலமுருகன், வினோதினி மற்றும் பார்ச்சூனர் காரில் வந்த திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 42, அவரது மனைவி வித்யா, 34, பாலசுப்ரமணியன், 67, பராசக்தி, 48, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஆறு பேரையும் அப்பகுதியினர் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவு 12:30 மணிக்கு பாலமுருகன், வினோதினி இறந்தனர்.

