/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடமானமாக வைத்த இடம் பத்திர பதிவு செய்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு
/
அடமானமாக வைத்த இடம் பத்திர பதிவு செய்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு
அடமானமாக வைத்த இடம் பத்திர பதிவு செய்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு
அடமானமாக வைத்த இடம் பத்திர பதிவு செய்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 19, 2025 03:25 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அடமானமாக வைத்த இடத்தை மாற்றி பத்திர பதிவு செய்தது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி செந்தமிழ்செல்வி, 55; இவர் கடந்த 2009ம் ஆண்டு கஸ்துாரி பாய் தெருவில் 6 சென்ட் காலிமனை கிரையம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து கிரையம் பெற்ற இடத்தினை அடமானமாக வைத்து அதே பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம், 60; அவரது மனைவி காந்திமதி, உறவினர் கலைச்செல்வி ஆகியோரிடம் ரூ.3 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 11ம் தேதி இரவு 7.15 மணிக்கு செந்தமிழ்செல்வி வட்டி பணத்துடன் சென்று இடத்தை கேட்டபோது நாகலிங்கம் மனைவி காந்திமதி, ஆசிங்கமாக திட்டி இடம் கிடையாது, அதனை எங்க பெயருக்கு மாற்றி எழுதியாச்சி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செந்தமிழ்செல்வியின் பழைய போட்டோவை பயன்படுத்தி, காந்தி ரோடில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் அன்பரசனிடம் போலியாக வாழ்வு சான்று பெற்று கடந்த 2021ம் ஆண்டு அக்., 4ம் தேதி பத்தி ர பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக செந்தமிழ்செல்வி கொடுத்த புகாரில் கள்ளக்குறிச்சி போலீசார் நாகலிங்கம், காந்திமதி, இவர்களது உறவினர் கலைச்செல்வி, டாக்டர் அன்பரசன்,35; ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரி த்து வருகின்றனர்.

