/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை கொடுமைபடுத்திய கணவன் மீது வழக்கு பதிவு
/
மனைவியை கொடுமைபடுத்திய கணவன் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 04, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் அப்துல்ரபீக் மனைவி ஷாகின்,32; இருவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணமான நிலையில் குழந்தை இல்லை. அப்துல் ரபீக் வேலைக்காக அடிக்கடி கத்தார் நாட்டிற்கு செல்வது வழக்கம்.
குழந்தை இல்லாததால் கணவன் அப்துல்ரபீக் மற்றும் குடும்பத்தினர், ஷாகினை கொடுமைபடுத்தினர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி பணம் மற்றும் நகை கேட்டு ஷாகினை தாக்கி, வீட்டிலிருந்து வெளியே துரத்தியுள்ளனர். இது குறித்து மனைவி ஷாகின் அளித்த புகாரின் பேரில், கணவன் அப்துல்ரபீக் மற்றும் சிலர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

