/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் மத்திய சிறைச்சாலை இல்லாததால் வீண் அலைச்சலால் போலீசார் தவிப்பு
/
கள்ளக்குறிச்சியில் மத்திய சிறைச்சாலை இல்லாததால் வீண் அலைச்சலால் போலீசார் தவிப்பு
கள்ளக்குறிச்சியில் மத்திய சிறைச்சாலை இல்லாததால் வீண் அலைச்சலால் போலீசார் தவிப்பு
கள்ளக்குறிச்சியில் மத்திய சிறைச்சாலை இல்லாததால் வீண் அலைச்சலால் போலீசார் தவிப்பு
ADDED : மே 10, 2025 12:57 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய சிறைச்சாலை இல்லாததால், போலீசார் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய, 3 காவல் உட்கோட்டங்கள் உள்ளன.
இங்கு, 19 சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 3 அனைத்து மகளிர், 3 மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளன. மேலும், மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் பகுதியில் கிளைச்சிறைகள் இயங்கி வருகின்றன.
இந்த கிளைச்சிறைகளில், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே வைத்திருக்க முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டும் போது, கடலுார், மத்திய சிறைக்கு அழைத்து செல்கின்றனர். கைதானவர்களின் உறவினர்கள் ஜாமின் கோரி கோர்ட்டில், மனு தாக்கல் செய்வர்.
ஜாமின் கிடைப்பதற்குள் சிறையில் இருப்பவர்களின் நீதிமன்ற காவல் முடிந்துவிட்டால், சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார், சிறைக்கு சென்று, வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை பஸ்ஸில் அழைத்து வந்து கோர்ட்டில், ஆஜர்படுத்தவேண்டும். அங்கு, கோர்ட் காவல் நீட்டிக்கப்பட்டதும், மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
போலீசார் தவிப்பு
மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கரியலுாரில் இருந்து, 145 கி.மீ., தொலைவிலும், சின்னசேலத்தில் இருந்து, 130 கி.மீ., தொலைவிலும், மூங்கில்துறைப்பட்டில் இருந்து 106 கி.மீ., தொலைவிலும் கடலுார் உள்ளது.
கரியாலுார், சின்னசேலம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து நேரடியாக கடலுாருக்கு செல்லும் வகையில் பஸ் வசதி இல்லை.
இதனால், போலீசார் வெவ்வேறு பஸ்களில் பயணம் செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது.
நடவடிக்கை தேவை
இது குறித்து போலீசார் கூறுகையில், 'இந்த பணியை மேற்கொள்ள ஒரு நாள் முழுவதும் தேவைப்படுவதால் வீண் அலைச்சல், கால விரயம் ஏற்படுகிறது. மேலும், சிறைக்கு அழைத்து செல்லும் போது சம்மந்தப்பட்ட நபர்கள் தப்பி ஓடி விடுவார்களோ என்ற அச்சமும் உள்ளது.
அதனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம், வீண் அலைச்சல், கால விரயத்தை தவிர்க்கும் வகையில், கள்ளக்குறிச்சியில் ஆண் மற்றும் பெண்களுக்கான மத்திய சிறைச்சாலையை அமைக்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.