/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் செயின் பறிப்பு வீடு புகுந்து துணிகரம்
/
பெண்ணிடம் செயின் பறிப்பு வீடு புகுந்து துணிகரம்
ADDED : ஜன 14, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் தாலிச் செயினை பறித்து சென்ற நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொரசகுறிச்சியைச் சேர்ந்தவர் ரவி மனைவி மஞ்சுளா, 33; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர், மஞ்சுளா அணிந்திருந்த ஆறரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

